ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுத்தாக்குதல்

afg
afg

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சார பேரணி அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் நடாத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று இரண்டாவது குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 22 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 38 பேர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரஹிமி இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் இன்று ஆப்கான் அதிபர் அஷ்ரப்கானி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதிக்கு அருகே திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 24 பேர் பலியாகியிருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருந்தனர்.

ஆப்கானிஸ்தால் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இரத்தானமையின் காரணமாக தலிபான்கள் தொடர்ந்தும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.