பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை – மலேசிய பிரதமர்

1 bnm 1
1 bnm 1

பாம் எண்ணை இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாம் எண்ணெய் மற்றும் இலத்திரனியல் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாம் எண்ணெய் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பங்களிப்பு உள்ளது.

மலேசியாவிலிருந்து பாம் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான மலேசியாவுக்கு பெரும் சவாலை உருவாக்கும். ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா மலேசியாவின் சிறந்த சந்தையாக உள்ளது. இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்து வருகிறது என கூறினார்.