சீனாவுடனானா எல்லையை ரஷ்யா மூடுகிறது

china russia border
china russia border

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 170 பேர் பலியாகியதுடன் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் இந்த வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா ட்பட பல நாடுகள் சீனாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட உள்ளதாகவும், சீனர்களுக்கு மின்னணு விசா வழங்குவதை ரத்து செய்ய உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸால் இதுவரை எந்த நபரும் பாதிக்கப்படாத நிலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ரஷ்யா எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.