தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று

thanchai
thanchai

தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் மணியரசன் உட்பட சட்டத்தரணிகள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தனர்.

இதேபோல சமஸ்கிருதத்தில் நடத்த கோரியும் மனு செய்யப்பட்டது. இந்த மனுக்களை இரு நீதிபதிகள் விசாரித்தனர்.

தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில் இருக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறைக்குள்ளும் தமிழ் இடம் பெற வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று (31) காலை 10.30 மணிக்கு இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கவுள்ளனர்.