சீனாவில் தற்போதைய சூழல் கவலைக்கிடமாக உள்ளது

1 er
1 er

சீனாவில் தற்போதைய சூழல் கவலைக்கிடமாக உள்ளது என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளது, அந்த நாடு கொரோனா மரண எண்ணிக்கையை மூடி மறைப்பதாக சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் மரமடைந்தவர்களின் எண்ணிக்கை 213 என அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் நாள்தோறும் வுஹான் நகரில் ரகசியமாக எரியூட்டப்படும் சடலங்களின் எண்ணிக்கை இதுவரை எந்த அறிக்கைகளிலும் வெளியிடப்படவில்லை எனவும்,மருத்துவமனைகளில் இருந்து நேரடியாக எரியூட்டும் பகுதிகளுக்கு குவியல் குவியலாக சடலங்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சடலங்களை எரியூட்டும் இடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களும் இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே வுஹானில் தற்போதைய நிலை தொடர்பில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் குற்றவுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வியாதி தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் வியாதியின் தாக்கம் ‘குறைவாக இருந்திருக்கும்’ என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை 213 பேர் சீனாவில் கொரோனாவுக்கு பலியானதாக கூறப்படும் நிலையில், சுமார் 10 ஆயிரம்  பேருக்கு கொரோனா பதிப்பு இருப்பதாக கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.