கொரோனா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் உயிரிழப்பு!

ddwww2222
ddwww2222

சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த மருத்துவர் இன்று(07) உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமி குறித்து மருத்துவர் லீ வென் லியாங் இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகப் பரவியுள்ள வூஹானில் உள்ள வைத்தியசாலையில் பணியாற்றிய அவர், நோய்த்தாக்கம் காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தை மக்களுக்கான போர் என சீனா பிரகடனம் செய்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இதேவேளை, சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.