95 ஓட்டங்களுக்கு 3 விக்கட்கள்இழப்பு

cricket asia cup pak ind cab87b86 220e 11e9 8b30 9519234c3e24
cricket asia cup pak ind cab87b86 220e 11e9 8b30 9519234c3e24

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

பாகிஸ்தான் – ராவல்பிண்டியில் அமைந்துள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வரும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி சற்று முன்னர் வரை 03 விக்கட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

மூன்று இருபதுக்கு 20, 2 டெஸ்ட் மற்றும் ஒற்றை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.