மத்தும பண்டாரவின் பெயரை செயற்குழு அங்கீகரிக்க வேண்டும்

2 1
2 1

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தேசிய கூட்டணியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனையை தாமும் வரவேற்பதாக குறிப்பிட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அதனை செயற்குழுவில் முன்வைத்து அங்கீகாரம் பெற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.