அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிப்பு!

20 1
20 1

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து அப்துல்லா அப்துல்லா என்பவர் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் இறுதியாக, கடந்த மாதம் வெளியாகின. அதில் அஷ்ரப் கனி 50.64 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அஷ்ரப் கனி பதவியேற்புக்கு போட்டியாக, தனக்கு தானே அதிபராக அறிவித்து பதவியேற்பை நடத்தினார்.

இதனால் அரசியல் நெருக்கடி அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், நேற்று மதியம், காபூலிலுள்ள அதிபர் மாளிகையில், அஷ்ரப் கனி அதிபராக பதவியேற்றார்.

அதிபர் பதவியேற்றபோதே, திடீரென அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது .இருப்பினும் அஷ்ரப் கனி தொடர்ந்து பதவியேற்பு பிரமாணத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ள கூட அஷ்ரப் ஓடிப்போகவில்லை. அப்படியே பதவிப் பிரமாணம் எடுத்தார். இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.