இந்தியாவிலும் பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை!

1 anur
1 anur

சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பயணம் மேற்கொண்ட மற்றும் அங்கியிருந்து இந்தியா வந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய ஏற்கனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு இரத்து செய்திருந்தது.

மேலும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் விசா வழங்கப்பட்டு, இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தால் அதுவும் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.