கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொமரேனியன் நாய் பலி

6 pomeranian
6 pomeranian

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பொமரேனியன் நாய், சிகிச்சைக்கு பிறகு நோயிலிருந்து மீண்ட பின்னர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரைச் சேர்ந்த 60 வயதான ஒரு பெண்மணியுடையது அந்த 17 வயதான பொமரேனியன் நாய்.

அதன் பெயர் பூச். ஆசை ஆசையாக வளர்த்து வந்தார் அந்த பெண்மணி.

ஆனால், தாய்லாந்தில் கொரோனா வேகமாக பரவியபோது, அந்த நாயும் பாதிக்கப்பட்டது.

உடனடியாக அரசு அந்த நாயை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கியது.

பிப்ரவரி 26, புதன்கிழமை முதல் அரசு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த சனிக்கிழமை அந்த நாய் வீடு திரும்பியிருந்தது.

அதிகாரிகள் அந்த நாய் தனிமைப்படுத்தலில் இருந்தபோது வைரஸ் சோதனைக்காக நாயின் மூக்கு, வாய்வழி மற்றும் ரத்த மாதிரிகளை அவ்வப்போது சோதனை செய்துள்ளனர்.

அது குணமடைந்தது உறுதியான பிறகே வீட்டுக்கு அனுப்பினர்.

மார்ச் 16ம் திகதி நாய் இறந்துள்ளது.

நாய் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விரும்பினர்.

ஆனால், நாய் உடலை, பிரேத பரிசோதனைக்கு அந்த நாய் உரிமையாளர் அனுமதிக்க விரும்பவில்லையாம்.

இந்த நாய்க்கு ஏற்பட்ட பாதிப்புதான், மனிதனிடமிருந்து, விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் என அறியப்பட்ட முதல் சம்பவம் என்று கருதப்பட்டது.