ராணுவ முகாம்மீது பயங்கரவாத தாக்குதல்; 23 வீரர்கள் பலி

202004070241271334 Tamil News 23 Malian soldiers killed in attack on military camp in SECVPF
202004070241271334 Tamil News 23 Malian soldiers killed in attack on military camp in SECVPF

மாலி நாட்டில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் அரங்கேறி வருகிறநிலையில், அந்நாட்டின் ஜியோ மாகாணம் பம்பா நகரில் அமைந்துள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர்.