கொரோனாவின் பிறப்பிடமான வூஹான் நகர மக்களுக்கு புதிய அனுமதி

8 g3
8 g3

சீன நகரமான வூஹானில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடமான வூஹான் நகரில் 1.1 கோடி மக்கள் வாழ்கின்றனர்,

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனாவால் எந்த மரணமும் நிகழவில்லை என நேற்று அரசு தகவல் வெளியிட்டதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சீன அரசின் செயலி மூலம் உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்நகரவாசிகள் ஜனவரி 23ஆம் திகதிக்குப் பிறகு வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.