கொரோனா கட்டுப்பாடுகளால் நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் அபாயம்!

1454515592 7995
1454515592 7995

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளால் காப்பகங்கள் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ள பிரெஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று, விரைவில் காப்பகத்தில் இடமில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 3,500க்கும் அதிகமான செல்லப்பிராணிகள் காப்பகங்களை வந்தடைகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் சூழல் தற்போது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வெளியே செல்வதற்கான அனுமதி படிவத்தில் செல்லப்பிராணிகளை தத்தெடுக்க செல்வதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை.

விலங்குகள் நலத்தொண்டு நிறுவன தலைவரான Jacques-Charles Fombonne கூறும்போது, எங்களிடம் இன்னும் 300 அல்லது 400 நாய்களுக்குத்தான் இடம் இருக்கிறது.

அதற்குப்பின் செல்லப்பிராணிகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவை கருணைக்கொலை செய்யப்படுவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார்.

ஆகவே, செல்லப்பிராணிகளை தத்துக்கொடுக்கும் வகையில் வழிமுறைகள் செய்து தருமாறு நாங்கள் அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.