பிரான்ஸ் மக்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 1

பிரான்சில் முதன்முறையாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதரத்துறை இயக்குனர் Jérôme Salomon தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 424 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,210 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 369 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றைய எண்ணிக்கையை விட 82 குறைவாகும்.

கொரோனா வைரசின் தீவிரம் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக Salomon தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் படிப்படியாக தொற்றுநோயின் தீவிரத்திலிருந்து விலகிக்கொண்டு இருக்கிறோம், எனினும் மிக எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கவேண்டிய சூழலிது.

ஊரடங்கு உத்தரவை மதித்து இந்த தொற்றுநோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 30,767 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15க்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.