சீனாவை மீண்டும் கொரோனா தாக்கலாம் ஜி ஜிங்பிங் எச்சரிக்கை!

4 ff
4 ff

சீனாவில் தீவிரமான செயல்பாடு காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் மீண்டும் அங்கு கொரோனா தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில்தான் உலகிலேயே முதல் நபர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த இரண்டு வாரமாக அங்கு உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு அதிகமான வெளிநாட்டு நபர்கள் மூலம்தான் தற்போது கொரோனா பரவி வருகிறது. அதாவது வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வரும் நபர்கள் மூலம்தான் தற்போது சீனாவில் கொரோனா பரவி வருகிறது. மாறாக உள்நாட்டில் பெரிய அளவில் கொரோனா பரவவில்லை.

சீனாவில் கொரோனாவால் 81,865 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3335 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் நேற்று கொரோனா காரணமாக இரண்டு பேர் பலியானார்கள். சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது .சீனாவில் 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் 1160 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால் சீனாவில் தீவிரமான செயல்பாடு காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் மீண்டும் அங்கு கொரோனா தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். நேற்று சீனாவில் கொரோனா தொடர்பாக கூட்டம் நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஜி ஜிங்பிங், சீனாவில் கொரோனா மீண்டும் பரவ வாய்ப்பு இருக்கிறது. நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சீனாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட கூடாது. சீனாவிற்கு தற்போது வெளிநாட்டு பயணிகள் மூலம்தான் கொரோனா பரவுகிறது. இதனால் சீனாவில் இருக்கும் வெளிநாட்டு பயணிகளை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சீனாவில் இருக்கும் வெளிநாட்டு நபர்கள் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும். இவர்கள்தான் சீனாவில் கொரோனாவை மீண்டும் உருவாக்குவார்கள்.

அதே சமயம் நாம் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது சீனாவின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உடனே உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். உடனே உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்க வேண்டும். விரைவில் நாம் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. அங்கு வுஹன் உள்ளிட்ட எல்லா நகரங்களும் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். இதனால் சீனாவில் கொரோனாவின் செகண்ட் வேவ் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும். இதனால் பலர் முன்பை விட பலியாக அதிக வாய்ப்புள்ளது. சீனா அப்படி ஒரு மோசமான சூழ்நிலையை இனியும் எதிர்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.