சவுதியில் போரையே நிறுத்த வைத்த கொரோனா !

625.499.560.350.180.700.708.800.900.160.90
625.499.560.350.180.700.708.800.900.160.90

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் ஏமனில் இரு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் போரால் சிதைந்து போயிருக்கும் ஏமன் நாட்டில் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்த ஐ.நா. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏமனில் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதாக ஏமன்-சவுதி அரேபிய கூட்டுப்படைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், போர் நிறுத்த அறிவிப்பு ஒரு சதித்திட்டம் என்று விமர்சித்துள்ளார். மேலும்,இந்த அறிவிப்பு வெளியாக சில மணி நேரங்களிலேயே மரீப் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விவரம் குறித்து வெளிவரவில்லை.

இதில் ஏமன் அரசுக்குச் சவுதி அரேபியாவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவாக உள்ளன. இரு தரப்பினரும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.