தென்கொரியாவில் இடம்பெற்ற தேர்தல் : ஜனாதிபதி மூன் ஜே யின் கட்சி வெற்றி!

Untitled 5
Untitled 5

தென்கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே யின் தலைமையிளான கட்சி வெற்றி.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான பதிலை மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாடுகளின் தேர்தலை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்திய முதல் நாடாக தென் கொரியாவே காணப்படுகின்றது.

வாக்களிப்பதற்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் பேணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு பதிவு இடம்பெற்று கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 300 ஆசனங்களை கொண்ட தேசிய சட்டமன்றத்தில் மூன் ஜே யின் தலைமையிளான ஜனநாயகக் கட்சி 163 இடங்களை வென்றுள்ளது.

மொத்த வாக்குப்பதிவு 66% க்கும் அதிகமாக இருந்தது, இது 18 ஆண்டுகளில் மிக உயர்ந்ததும், 18 வயது சிறுவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் முறையாகும் இவ் தேர்தல் காணப்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.