காத்திருந்த அமெரிக்கா – சரியாக சிக்கிய சீனா

8 2
8 2

கொரோனா பலி எண்ணிக்கையை சீனா திடீர் என்று உயர்த்தி இருப்பது அந்நாட்டுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா இதை கண்டிப்பாக பயன்படுத்தி சீனாவை நெருக்கும் என்கிறார்கள்.

கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வுஹனில் பலி எண்ணிக்கையில் மாற்றம் செய்துள்ளது. வுஹனில் 2579 பேர் பலியானதாக சீன அரசு கூறி இருந்தது.

தற்போது வுஹனில் 1290 பேர் கூடுதலாக பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வுஹனில் மட்டும் 3869 பேர் பலியானதாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக சீனாவில் 4,632 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சீனா காரணமும் தெரிவித்துள்ளது. நாங்கள் கணக்கு சரியாக பார்க்கவில்லை. சிலரின் மரணத்தை கணக்கில் சேர்க்கவில்லை. மருத்துவமனைகள் சில இப்போதுதான் மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சிலர் வீடுகளில் மரணம் அடைந்துள்ளனர். எல்லோரையும் சேர்த்து இப்போது புதிய பலி எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறோம், என்று சீனா அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா விஷயத்தில் சீனா வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அதிபர் டிரம்பே நேரடியாக இந்த குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், சீனா கொரோனா விஷயத்தில் உலக நாடுகளை முன்பே எச்சரித்து இருக்கலாம். ஆனால் சீனா அதை செய்யவில்லை. கொரோனா குறித்த தகவல்களை சீனா மறைத்தது.

இது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்று சீனா கூறியது. சீனாவில் வெளிப்படைத்தன்மை இல்லை. கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டு இருக்கும் மரணங்கள் குறைவாக தெரிகிறது. இந்த மரணங்கள் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சீனா கொரோனா குறித்த அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் சீனா வெளியுறவுத்துறை செயலாளரிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பாம்பியோ, சீனா கொரோனா குறித்த உண்மைகளை மறைத்துவிட்டது. சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. இதை நாங்கள் விசாரிக்க போகிறோம். கொரோனாவை சீனா எப்படி கட்டுப்படுத்தியது என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை சீனா எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு, துணை அதிபர் மைக் பாம்பியோ வெளிப்படையாக, கொரோனா வைரஸ் வுஹனில் இருந்து தோன்றியது என்று எங்களுக்கு தெரியும். அதேபோல் அங்குதான் இந்த வைரஸ் ஆராய்ச்சி மையம் இருக்கிறது என்றும் தெரியும், இதை நாம் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோபமாக குறிப்பிட்டுள்ளார். இப்படி சீனா மீது அமெரிக்க அரசு மிக கோபமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் அமெரிக்காவிற்கு வசதியாக தற்போது சீனா தங்களின் இறப்பு எண்ணிக்கையை மாற்றி உள்ளது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இறப்பு எண்ணிக்கையை கூட்டி இருக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது. சீனா இத்தனை நாட்கள் இதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. சீனாவே அதை தன்னுடைய வாயால் ஒப்புக்கொண்டது போல ஆகியுள்ளது.

சீனாவின் வெளிப்படைத்தன்மை குறித்து டிரம்ப் முக்கிய கேள்விகளை, கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் சீனா தற்போது காட்டியிருக்கு இருக்கும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. உண்மையான இறப்பு எண்ணிக்கை இதை விட பல அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதை சீனா மறைக்கிறது. உண்மையான பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள், உண்மைகள் விரைவில் வெளி வரும் என்றும் கூறப்படுகிறது.