லண்டனில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

download 30
download 30

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் எதிரொலியாக உலக மக்களே வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், இதன்காரணமாக லண்டனில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக பொலிஸாரின் தரவுகள் தெரிவிக்கின்றன.

லண்டன் நகர் முழுவதும், கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி வரை 6 வாரங்களில், ஒரு நாளுக்கு சராசரியாக 100 என்ற எண்ணிக்கையுடன் குடும்ப வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட  4,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 வாரங்களில் குடும்ப வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய புகார் பற்றிய அழைப்புகள், 3 பங்கு அதிகரித்து உள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மார்ச் 9ஆம் திகதியில் இருந்து இதுவரை, புகார்கள் 24 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளன.

இவற்றில் குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய புகார்கள் கடந்த வருடத்தில் இருந்து 3 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளன. இவை குற்ற வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், இந்த புகார் எண்ணிக்கை கடந்த மார்ச் 9ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி வரையில் 9 சதவீத அளவுக்கு உயர்ந்து உள்ளது. லண்டனில் குடும்ப சண்டையில் இரு கொலைகளும் நடந்துள்ளன.