24 மணித்தியாலத்தில், 601 மரணங்கள்

1 ds 1
1 ds 1

பிரிட்டனின்  வைத்திசாலைகளில், கடந்த 24 மணித்தியாலத்தில்,  601 பேர் மரணித்துள்ளதாகவும், இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்கள் 22,370 ஆக உயர்ந்துள்ளதாகவும் metro News   தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில்  445பேரும்,  ஸ்காட்லாந்தில் 83 பேரும், வேல்ஸில் 73 பேரும் மரணித்துள்ளதாக, வைத்தியசாலைப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   வட அயர்லாந்து அதன் புள்ளிவிவரங்களை இதுவரை  வெளியிடவில்லை.

இதன் அடிப்படையில்  இங்கிலாந்து (19,740), ஸ்காட்லாந்து (1,415), வேல்ஸ் (886) மற்றும் வடக்கு அயர்லாந்து (329, நேற்றைய நிலவரப்படி) ஆகியவற்றின்  அண்மைய  மருத்துவமனை இறப்புகளை இணைப்பதன் மூலம் மொத்தம் 22,370 பேர் மரணித்துள்ளதாக  கணக்கிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையின் தினசரி புதுப்பிப்பில் பராமரிப்பு இல்லங்களில் இறப்புகள் சேர்க்கப்படும் என சுகாதார செயலாளர் அறிவித்ததை அடுத்து, அரசாங்கம் கணிசமாக அதிக உத்தியோகபூர்வ எண்ணிக்கையை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.