நிலைகுலைய வைத்த கொவிட்-19: ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு

1 10
1 10

ரஷ்யாவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 105பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (செவ்வாய்க்கிழமை) 5841பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 99,399ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், வைரஸ் தொற்றின் தாயகமான சீனாவையே ரஷ்யா பின்தள்ளியுள்ளது. சீனாவில் 82,858பேர் மாத்திரமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 972ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 88,141பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 10,286பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.