பழியை சுமந்த நாடு; கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்

1 ttt6
1 ttt6

கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த சமயம் அது. அமெரிக்காவில் அப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையை கொரோனா வைரஸ் கடந்து இருந்தது. ஆனால் அப்போது ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தது. ரஷ்யாவில் வெறும் 120 பேர் மட்டுமே பிப்ரவரி இறுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ரஷ்யா கொரோனாவிற்கு எதிராக தனது எல்லைகளை மூடி, மிக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாது என்றுதான் கணிக்கப்பட்டது.

ரஷ்யாவும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தீவிரமாக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இந்தியாவை போலவே ரஷ்யாவிலும் கொரோனா தீவிரம் அடையும் முன் முழு லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டது. அங்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மே 11 வரை இந்த லாக் டவுன் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் 2 ஆயிரத்தை கூட தொடாமல் மிகவும் மெதுவாக முன்னேறி வந்தது. இதனால் ரஷ்யா எப்படியும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என்றுதான் நினைத்தார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு எதிராக நிறைய சந்தேகங்களும் வைக்கப்பட்டது. ரஷ்யாவில் மட்டும் இந்த வைரஸ் பெரிய அளவில் வேலையை காட்டவில்லை. என்ன காரணமாக என்று கேள்வி எழுந்தது. முதலில் இந்த வைரஸ் தாக்குதல் ஒரு பயோ வார் என்று சந்தேகிக்கப்பட்டது.
அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக ஏதாவது ஒரு நாடு இந்த போரை துவங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவே இந்த போரை துவங்கி இருக்கலாம். சீனாவின் வளர்ச்சியை தடுக்க ரஷ்யா இப்படி செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக உலகில் என்ன நடந்தாலும் ரஷ்யா மீதோ சீனா மீதோ பழியை போடுவதுதான் அமெரிக்காவின் முதல் வேலை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா தொடக்கத்தில் சந்தேகம் அடைந்தது.

ரஷ்யாவும் பல வருடங்களாக பயோ ஆராய்ச்சிகளை செய்து வருவதால், கொரோனா வைரஸை ரஷ்யா உருவாக்கி இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அமெரிக்காவையும், சீனாவையும் கட்டுப்படுத்தும் பொருட்டு ரஷ்யா இப்படி வைரசை வெளியிட்டு பயோ வார் தொடுத்து இருக்குமோ என்று அமெரிக்காவை சேர்ந்து சிலர் கூட அச்சம் தெரிவித்தார்கள். ரஷ்யாவும் கொரோனா வைரஸ் குறித்து எதுவும் பேசாமல் நாளுக்கு நாள் அமைதியாக இருந்தது.

இதனால் ரஷ்யா மீது கடுமையான சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் ரஷ்யா போக போக கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்க தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதி வரை அங்கு 10 ஆயிரத்தை கூட கொரோனா பாதிப்பு தொடவில்லை. ஆனால ஏப்ரல் 15ம் தேதி ஒரே நாளில் மொத்தம் 3500 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் தினமும் சராசரியாக 4000 என்ற விகிதத்தில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது.

அதன்பின் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே நாளில் 6500 கேஸ்கள் வந்தது. அதில் இருந்து சரசர என்று வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. தினமும் சராசரி எண்ணிக்கை 5900 என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதனால் அமெரிக்காவிற்கு ரஷ்யா மீது இருந்த சந்தேகம் போனது. ரஷ்யாவிற்கும் கொரோனாவிற்கும் எதுவும் சம்பந்தம் இல்லை என்று அமெரிக்கா உறுதியானது.

அதே சமயம் ரஷ்யா கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு உதவி செய்வதாகவும் அறிவித்தது. இரண்டு நாடுகளும் மாற்றி மாற்றி உதவி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. கொரோனாவை இரண்டு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இத்தனை வருடங்களுக்கு பிறகு கொரோனா இந்த இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்து உள்ளது. ரஷ்யா அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவிலும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த வாரம் முழுக்க தினமும் 7000 என்று விகிதத்தில் வேகமாக கொரோனா பரவி வந்தது. ஆனால திடீர் என்று நேற்று ஒரே நாளில் 10022 பேர் கொரோனா காரணமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டார்கள். ஒரே நாளில் ரஷ்யாவை கொரோனா புரட்டிபோட்டுள்ளது. லாக் டவுன் இருந்தும் கூட இதுதான் அங்கு தற்போது நிலை. தற்போது கொரோனா பாதிப்பு ஏற்படும் வேகம் அமெரிக்காவிற்கு இணையாக ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது.

இதனால் ரஷ்யாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 124054 பேர் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. 1222 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர். மாஸ்கோவில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக அங்கு வெறும் 9 நாளில் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இரட்டிப்பு ஆகும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

முக்கியமாக ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.தற்போது மிகாய்ல் மிஷுஸ்டின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ் அங்கு பிரதமரின் பணிகளை கவனித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இடைப்பட்ட காலத்தில் அதிபர் புடினை சந்தித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் அதிபர் புடின் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் பிரதமருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதும் உறுதியாகவில்லை.

இதனால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படும் நாடாக ரஷ்யா உருவெடுக்க தொடங்கி உள்ளது. உலகின் அடுத்த எபிசென்டராக ரஷ்யா மாறும் என்கிறார்கள். உளவாளிகள் நாடு என்று அழைக்கப்படுவது ரஷ்யா. ரஷ்யாவின் அதிபர் புடின் கூட ஒரு காலத்தில் உளவாளிதான். உலகம் முழுக்க ரஷ்யாவிற்கு உளவாளிகள் இருக்கிறார்கள். ஆனாலும் கூட ரஷ்யா இந்த கொரோனா தாக்குதலை கணிக்காமல் போனது எப்படி, கொரோனாவிடம் தோல்வி அடைந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.