பிரேஸிலில் இரண்டாவது நாளாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

77928
77928

பிரேஸிலில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 10,169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 664பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்கா நாடான பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த இரண்டாவது நாள் இதுவாகும்.

பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவிய ஆரம்பத்தில் தொற்றுவீதம் குறைவாகவே இருந்த போதிலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தற்போது தொற்று வீதம் இரண்டு மடங்கு அதிகரித்து வருகின்றது.

இதன்மூலம் பிரேஸிலில் கடந்த 24 மணித்தியால இறுதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 156,061பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 10,656பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 83,720பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61,685பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.