ரஷ்யாவில் கொரோனா வைரஸ் இலட்சத்தை கடந்தது!

8b
8b

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,012பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 88பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 209,688ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,915ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 173,467பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 34,306பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.