உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சம்

0 virus 2
0 virus 2

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகின் 200இற்க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும், பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளது.

அதனடிப்படையில், 2 லட்சத்து 92 ஆயிரத்து 893 பேர் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 42 ஆயிரத்து 354ஆக அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வந்த போதிலும், பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமையால் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தது.

இதற்கமைய, இதுவரை நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் 16 லட்சத்து 2 ஆயிரத்து 443 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகிறது.

நேற்றைய தினம் மாத்திரம் அமெரிக்காவில் 1,630 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 22 ஆயிரத்து 802 பேர் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 8 ஆயிரத்து 636 பேர் ஆக பதிவாகியுள்ளது. இதுவரையில், 83 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினத்தில், 22 ஆயிரத்து 730 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 75 ஆயிரத்து 742ஆக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை பிரித்தானியாவில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் பிரித்தானியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 692 ஆக காணப்படும் அதேவேளை அங்கு நேற்று ஒரே நாளில் 627 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், இதுவரையான காலப்பகுதியில், பிரித்தானியாவில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 463 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை ஆசியாவில் நேற்றைய தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் என்னிக்கை 17 ஆயிரத்து 860 ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 7 லட்சத்து ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஆசியாவில் நேற்று ஒரே நாளில் பதிவான 391 உயிரிழப்புகளுடன் சேர்த்து அங்கு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.