மெக்ஸிக்கோவில் அதிக உயிரிழப்பு

4 rrr 6
4 rrr 6

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2473பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 290பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இதன்படி, மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 45,032பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு. 4,767பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 9,814பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30,451பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர 378பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.