ரஸ்யாவில் இன்று அதிக உயிரிழப்பு

5 s 3
5 s 3

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில், 119பேர் உயிரிழந்துள்ளதோடு, 9,200பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 15ஆம் திகதி 113பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும், வைரஸ் தொற்று பரவியதிலிருந்து கடந்த பத்து நாட்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை பாதிவான இரண்டாவது நாள் இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 272,043பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 2,537பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 63,166பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.