கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை நெருங்குகிறது!

eee176bf7ad71ee34654d9b10bf3ad94
eee176bf7ad71ee34654d9b10bf3ad94

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை அண்மிக்கின்றது.

இதற்கமைய உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 68 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, 33 இலட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அமெரிக்காவில் இதுவரை 19 இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.