நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்!!

5 tyg
5 tyg

தெற்கு பசிபிக்கில் தனியாக உள்ள நியூஸிலாந்தின் இட அமைப்புதான் மற்ற நாடுகளில் தொற்றின் வேகத்தைப் புரிந்துகொள்ள நேரமளித்தது, பிரதமர் ஜெசிந்தா அரசும் சரியாக முடிவெடுத்து, மிகவும் சீக்கிரமே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது, தொற்றைக் குறைத்தது.

நியூஸிலாந்து சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாடு கொரோனாவை முழுவதுமாக ஒழித்துவிட்டது.

கடைசியாக நோய்தொற்றுக்கு உள்ளானவரும் குணமடைந்துவிட்டார். அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு 17 நாள்கள் ஆகிய நிலையில், அவர் இப்போது குணமடைந்துள்ளார்.

17 நாள்களுக்கு முன் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போது 40,000 பேர் பரிசோதிக்கப்பட்டிருந்தனர்.

அவருக்குப் பிறகு, தற்போது யாருக்கும் தொற்று இல்லை. கடந்த பெப்ரவரியிலிருந்து முதல்முறையாகத் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைத் தொட்டுள்ளது.

அந்நாட்டின் எல்லைகளுக்குள் மற்ற நாட்டவர்களுக்கு தற்போது வரை முற்றிலும் அனுமதியில்லை. நியூஸிலாந்து குடிமக்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உள்ளன.

எனினும் மறுபடியும் கொரோனா தொற்று வருவதற்கு வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.