சீனாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் அவுஸ்ரேலிய பிரதமர்

i3 16 2
i3 16 2

ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறும் சீனாவின் குற்றச்சாட்டு அபத்தமானது, அதை நிராகரிப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து சர்வதேச விசாரணை வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இருநாட்டு தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில், கொரோனா தொற்றுநோய் குறித்த சுதந்திரமான விசாரணை கோரும் தீர்மானம் ஐரோப்பிய யூனியன் மற்றும் அவுஸ்ரேலியாவின் கூட்டு முயற்சியால் நிறைவேறியது. அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சிக்கு தடை விதித்ததுடன், அவுஸ்ரேலிய பார்லிக்கு கூடுதல் வரிகளை விதித்து சீனா பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், செவ்வாயன்று, சீன கல்வி அமைச்சகம், இனவெறி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், அவுஸ்ரேலியாவுக்கு சென்று கல்வி பயிலும் முடிவை சீன மாணவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது.

வெளிநாடுகளில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்கள் மூலம்அவுஸ்ரேலியா, ஆண்டுக்கு 26 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி வருகிறது. மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை போன்றே முன்னர், சீன சுற்றுலா பயணிகள் அவுஸ்ரேலியா செல்வதை தவிர்க்க வேண்டுமென சீன சுற்றுலா அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இரண்டு எச்சரிக்கைகளுக்கும் கொரோனா தொற்று காரணமாக ஆசியாவை சேர்ந்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படலாமென கூறியிருந்தது.

பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் கான்பெராவில் உள்ள சீனத் தூதரகம், சீனா பயணம் மற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் குறித்து அவுஸ்ரேலியா தனது கண்டனத்தை பதிவு செய்தது.

‛அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுலாவுக்கு மற்றும் படிப்பதற்காக வருவது பாதுகாப்பற்றது’ என்ற சீனாவின் கூற்றை நிராகரிப்பதாக அவுஸ்ரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

‛நாங்கள் வெளிப்படையான வர்த்தக நாடாக உள்ளோம். ஆனால் எங்கிருந்து வந்தாலும் வற்புறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, எங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்ய போவதில்லை’ என ஸ்காட் மோரிசன் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், சீனாவின் இனவெறி குற்றச்சாட்டு குறித்து, ‛இது பயனில்லாதது. இது ஒரு அபத்தமான கூற்று. அதை நிராகரிக்கிறேன். இது சீனத் தலைமையால் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல.

உலகளவில் அவுஸ்ரேலியா சிறந்த கல்வி மற்றும் சுற்றுலா தயாரிப்புகளை அளித்து வருகிறது. சீனாவை சேர்ந்தவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு தேர்ந்தெடுத்து வருவது என்பது அவர்களின் முடிவாகும்.

எங்கள் தயாரிப்பு கவர்ந்திழுக்கும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என மோரிசன் தெரிவித்தார். அவுஸ்ரேலியா பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு குழு, சர்வதேச கல்வி அரசியல் காரணங்களுக்காக சிப்பாயாக பயன்படுத்தவதாக கவலை தெரிவித்துள்ளது.