கொரோனாவுடன் நிமோனியாவும் சேர்ந்த தால் பீதியில் அமெரிக்கா!

i3 19 2
i3 19 2

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 20 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜான் ஹாப்பின்ஸ் பல்கலை., இதுகுறித்து பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. நியூ ஜெர்ஸி மாநகரில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மே 25ம் திகதி தி முதல் ஜுன் 9ம் திகதிவரை ‘கோவிட் டிராக்கிங் புராஜக்ட்’ என்னும் கொரோனா ஒழிப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

ஹார்வார்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் ஆஷிஷ் ஜா கணிப்பின்படி வரும் செப்., மாதத்துக்குள் அமெரிக்காவில் இன்னும் 1 லட்சம் பேர் கொரோனா தாக்கத்துக்கு பலியாவார்கள் என கணித்துள்ளார்.

முழு ஊரடங்கு என்பது இனி அமெரிக்காவில் நிகழ வாய்ப்பில்லை. மக்கள் சமூக விலகலுடன் பணிகள் செய்து பிழைக்கவே விரும்புகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஒருநாளைக்கு 800 முதல் அயிரம் அமெரிக்கர்கள் மரணம் அடைவர். வரும் ஒக்டோபர் மாதம் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் மரணம் அடைய வாய்ப்புள்ளதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷன் அமைப்பு கணித்துள்ளது.

செப்ரெம்பர் ஒக்ரோபர் மாதங்களில் அமெரிக்காவில் நிமோனியா காய்ச்சல் பரவும். ஏற்கனவே உள்ள கொரோனா பாதிப்புடன் நிமோனியாவும் சேர்ந்தால் விளைவுகள் மோசமடையும் என வைராலஜிஸ்ட் கிரிஸ்டோஃபர் மூரே கூறுகிறார்.

அமெரிக்காவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான அரிசோனா மாநிலத்தில் 79 சதவீதம் மருத்துவமனை படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த வேளையில் படுக்கை வசதி குறைந்து வருவது மாநில மருத்துவத்துறையை கவலை கொள்ளச் செய்துள்ளது.

வட கரோலினா மாகாணத்தில் வரலாறு காணாத அளவில் கடந்த வியாழனன்று 780 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து நடந்த போராட்டத்தில் கொரோனாவின் சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது அவரது உடல் அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் போராட்டம் குறைந்து வருவதால் கொரோனா பாரவலும் குறையும் என மருத்துவர்கள் கணிக்கின்றனர்.