கொரோனா தொற்று: நான்காவது இடத்தை அடைந்தது இந்தியா

merlin 167560230 dfe2fbdd ec11 4318 a1d7 cb5fc345ee80 videoSixteenByNineJumbo1600
merlin 167560230 dfe2fbdd ec11 4318 a1d7 cb5fc345ee80 videoSixteenByNineJumbo1600

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக அளவில் கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. அதாவது தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதற்கு முன்னர் பிரிட்டன் 2,91,588 தொற்று நோயாளிகளைக் கொண்டு நான்காவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியாவானது அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில்  காணப்படுகின்றது.

ரஷ்யாவில் தற்போது 4.93 இலட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 இலட்சமாக உள்ளது.

மேலும்  அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.