2 மாதங்களுக்கு பிறகு சீனாவில் மீ்ண்டும் பரவும் கொரோனா

a 18
a 18

சீனாவில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதியானது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை நிலை குலையச் செய்துள்ளது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்நாடுகளில் இலட்சகணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி விட்டனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சீனாவில் கொரோனா பரவாமல் இருந்தது. தற்போது அங்கு கெரோனா பரவல் மீ்ண்டும் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 57 பேருக்கு அந்நாட்டில் புதிதாக கொரோனா தொற்று உறுதியானதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்ட 57 பேரில் 36 பேர் பீஜிங்கை சேர்ந்தவர்கள் என்றும் தொற்று உள்ளூர் நபர்களிடமிருந்து பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 83,132 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏற்படாத நிலையில் பலி எண்ணிக்கை 4,634 ஆக நீடிக்கிறது.