பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் நட்சத்திரம்

i3 11 3
i3 11 3

பூமியில் இருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் உள்ள நாசாவின் நியூ ஹாரிசான் ஸ்பேஸ் கிராப்ட் புதிய நட்சத்திரங்களைப் படம் பிடித்துள்ளது.

இதற்குப் பெயர் பேரலாக்ஸ் எபெக்ட் முதல்முறையாக இது இந்த ஸ்பேஸ்கிராப்டில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து பார்த்தால் கைவிரல் நுனி அளவே உள்ள இந்த நட்சத்திரங்கள், தற்போது வித்யாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் இருந்து பார்ப்பதைக் காட்டிலும் ஸ்பேஸ்கிராப்ட் அனுப்பிய புகைப்படங்களில் வானம் வித்யாசமாக காட்சியளிப்பதாக கொலராடோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆலன் ஸ்டேர்ன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புளூட்டோ கிரகம் இதேபோல படம்பிடிக்கப்பட்டது. பூமியில் இருந்து 4.2 மற்றும் 7.7 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன ப்ராக்ஸிமா செண்டாவுரி மற்றும் வுல்ப் 350 ஆகிய நட்சத்திரங்கள். இவற்றையும் இந்த ஸ்பேஸ்கிராப்ட் படம் பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.