டிரம்பின் பிறந்த நாளை ஒபாமா தினமாக கொண்டாடிய அமெரிக்கர்கள்

i3 14 4
i3 14 4

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஒபாமாவின் ‘செல்வாக்கு’ துரத்த துவங்கியுள்ளது. டிரம்ப்பின் பிறந்த நாளை ஒபாமா தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி, டிரம்ப் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்காக, குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் தற்போது தயாராகி வருகிறார்.

அந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என, முடிவு செய்துள்ளார். ஆனால், அமெரிக்காவில் கொரோனாவைக் கையாண்ட விதம் மிக மோசமாகவுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால், அதிபர் டிரம்பின் செல்வாக்கு குறைத்து வருகிறது.

அதேவேளையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, முன்னாள் துணை அதிபர் பிடனுக்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜார்ஜ் பிளாய்ட் கொலை, டிரம்ப் அதை எதிர்கொண்ட விதம், அதுகுறித்த போராட்டங்கள் எல்லாமே டிரம்பிற்கு எதிராக திரும்பியுள்ளன. ஆனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஒபாமா குரல் கொடுத்தார். ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒபாமா, இந்த போராட்டம் காரணமாக இன்னும் செல்வாக்கு பெற்றுள்ளார்.

இதைச் சமாளிக்க முடியாமல் டிரம்ப் திணறி வரும் நிலையில், நேற்று தனது பிறந்த நாளை வெள்ளை மாளிகையிலேயே கொண்டாடினார். ஆனால் அவரது பிறந்த நாள் அன்றும் கூட, அவர் மிக மோசமாக இணைய தாக்குதலுக்கு உள்ளானார். ஒபாமா ஆதரவாளர்கள் டிரம்பின் பிறந்த நாளை ஒபாமா தினமாக கொண்டாடினார்கள். இதனால் வரும் தேர்தலில் அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றிபெறுவது கடினம் என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.