இத்தாலியில் மூன்று மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறப்பு

italy theatre
italy theatre

இத்தாலி தலைநகர் ரோமில், 3 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் தயங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்கு வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக, இரண்டு பேருக்கு இடையே 2 இருக்கைகள் இன்றி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதும், இத்தாலியில், 34,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், ஒரு சிலர் மட்டுமே திரையரங்குகளுக்கு வருகின்றனர்.

இதையடுத்து, அரசாங்கம் தற்போது அனுமதி அளித்தும், ஏராளமான திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.