ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து

maxresdefault 2
maxresdefault 2

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள  துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதன்போது கப்பலில் அத்தியாவசிய பணிக்காக 153 பணியாளர்கள் இருந்துள்ளதோடு, அவர்களும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.