கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 இலட்சம் பேர்

1586759512279 375

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 இலட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 இலட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 37 இலட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 இலட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 1,002,929
பிரேசில் – 579,226
ரஷியா – 344,416
இந்தியா – 237,196
பெரு – 145,320
சிலி – 205,397
இத்தாலி – 183,426
ஈரான் – 166,427
ஜெர்மனி – 175,300
துருக்கி – 161,533
மெக்சிகோ – 140,118
சவுதி அரேபியா – 105,175