பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமாக ஆண்டின் வெப்பமான நாள் பதிவானது!

PAY Brighton
PAY Brighton

மக்கள் கடற்கரைகள் மற்றும் அழகு இடங்களுக்கான வருகையை அதிகரித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) 14:26 பி.எஸ்.டி படி, ஹீத்ரோ விமான நிலையத்தில் வெப்பநிலை 32.6 செல்சியசுக்கு எட்டியதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த மே மாத இறுதியில் 28.9 செல்சியஸ் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

இதேவேளை, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் பகுதிகள் உட்பட பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய மஞ்சள் வானிலை எச்சரிக்கை வெள்ளிக்கிழமை 12:00 பி.எஸ்.டி முதல் சனிக்கிழமை 06:00 பி.எஸ்.டி வரை உள்ளது.