பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

5 1
5 1

நாட்டில் இடம்பெற்ற ஏப்ரல் (21) தற்கொலை குண்டுத் தாக்குதலைப் போன்று பிரித்தானியாவின் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பெண் ஒருவருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஆகக் குறைந்தது (14) ஆண்டுகள் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பிறந்து, இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க் என்ற (36) வயது பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் வணக்கத்தை தெரிவித்து, புன்னகையுடன் சிறைச்சாலை நோக்கி சென்றதாக பிரித்தானியாவின் டெய்லி மெய்ல் ஊடகம் தெரிவித்துள்ளது.

புனித போல் தேவாலயத்திற்கும், லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து வர்த்தக சந்தைக்கும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துவது தனது நோக்கமாகும் என காவல்துறையினர் குறித்த பெண் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.