பிரேசில் நாட்டில் புதிய ஆய்வுவொன்றில் தெரிவிக்கப்படுவது!

christ 318
christ 318

உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் கழிவு நீரில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுவொன்றில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.

(2019) ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் (30) ஆம் திகதி முதல் இந்த வருடம் முதல் நான்கு மாதக்காலப்பகுதியில் பிரசிலில் உள்ள பல நகரங்களில் கழிவு நீர் குழாய்ககளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய பிரேசிலின் விசாலமான நகரமான சென்டா கெட்டரினாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெறப்பட்ட கழிவு நீர் மாதிரியில் கொரோனா வைரஸ் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.