பிரித்தானியா தகுந்த விளைவுகளை எதிர்கொள்ளும்!

269450 ukchinaflag 3305 crop
269450 ukchinaflag 3305 crop

ஹாங்காங் பிரச்சினையில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா தகுந்த விளைவுகளை எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது.

ஹாங்காங்கில் சீனாவுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தை முன்னாள் ஆட்சியாளரான பிரித்தானியா நிறுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்த லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை ஆனால் சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக தலையிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.