பங்களாதேஷில் நீடிக்கும் சீரற்ற வானிலை!

images 3 1
images 3 1

பங்களாதேஷ் நாட்டில் நிலவியுள்ள சீரற்ற வானிலையானது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 10 தினங்களுக்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என அந் நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

கடந்த 20 தினங்களாக பங்களாதேஷில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீரில் சிக்குண்டு 81 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.