கொரோனா இப்படியும் பரவலாம் -ஆய்வில் தகவல்

112292886 gettyimages 1208286355
112292886 gettyimages 1208286355

அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், கொரோனா இயல்பான பேச்சு மற்றும் சுவாசத்தின் மூலம் பரவக்கூடும் என்றும், இரண்டு மீட்டருக்கு மேல் பயணிக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளது.

நெப்ராஸ்கா விஞ்ஞானிகள், கொரோனா பாதிப்புடன் படுக்கையில் இருந்த ஐந்து நோயாளிகளின் அறைகளில், அவர்கள் படுக்கைகளின் காலடியில் இருந்து சுமார் 30 சென்டிமீட்டர் காற்று மாதிரிகளை சேகரித்தனர்.

பல மணி நேரம் காற்றில் இருக்கக்கூடிய மைக்ரோ டிராப்லெட்டுகள் அல்லது ஏரோசோல்களை நோயாளிகள் பேசிக் கொண்டிருந்ததின் மூலம் உற்பத்தி செய்கிறார்கள், மேலும் சிலர் இருமி கொண்டிருந்தனர்.

இந்த ஆராய்ச்சி குழு ஒரு மைக்ரான் விட்டம் கொண்ட சிறிய துளிகளை சேகரித்தது ஆய்வு செய்துள்ளனர், மேலும் ஆய்வகத்தில் 18 மாதிரிகளில் மூன்றை அதே போல் உருவாக்க முடிந்தது.

மைக்ரோ டிராப்லெட்டுகள் மூலம் மக்கள் கொரோனாவால் பாதிக்க முடியும் என்ற கருத்தை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இணை பேராசிரியர் ஜோசுவா சாண்டார்பியா கூறியுள்ளார்.