சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்ற குவைத் மன்னர்!

b9d2ee73f81dfa9ca
b9d2ee73f81dfa9ca

குவைத்தின் 91 வயதான மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா இன்று வியாழக்கிழமை அதிகாலை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் குவைத் மன்னருக்கு அமெரிக்காவில் சிகிச்சை இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு சிறுநீர் பாதையில் அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு அவர் அடிக்கடி உடல்நல கோளாறு காரணமாக மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்கிறார்.

இந்நிலையில், அவருக்கு இறுதியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

குவைத் மன்னரின் உடல்நிலை மோசமானதால் பட்டத்து இளவரசர் தற்காலிக மன்னராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.