ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலி!

heli
heli

பிலிப்பைன்சில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இசபெல்லா மாகாணத்தில் கவாயன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு இராணுவத்துக்கு சொந்தமான ‘யூஎச்1டி’ ஹூய் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழமைபோலவே பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் 04 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதுபோன்ற உலகில் இடம்பெற்ற நடப்பு விவகாரங்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,