இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்-டிரம்ப் நம்பிக்கை

samayam tamil
samayam tamil

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள், மூன்றாவது மற்றும் இறுதி கட்ட சோதனையில் உள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில் அரசுடன் இணைந்து மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி கட்ட சோதனையில் 30 ஆயிரம் தன்னார்வளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றால், 2020 இறுதிக்குள் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க மாடர்னா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.