இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ள சீனா!

837475 xi
837475 xi

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது.

இதன்படி மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு தெரிவித்ததாவது

சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள். உரும்கி நகரில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தை அடைந்துள்ளது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.