சர்வதேச ரீதியில் 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம்!

unnamed 43 1
unnamed 43 1

சர்வதேச ரீதியில் 1.28 இலட்சம் சிறுவர்கள் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி வேளாண்மை நுகர்வு சந்தை என்பன துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைதூர கிராம பகுதிகளுக்கான உணவுப் பொருள் மற்றும் மருந்து விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வருடத்தில் மாத்திரம் 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மக்களிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் அது நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உணவுப் பற்றாக்குறையை நீக்க சர்வதேச நாடுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.